இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்து தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஜடேஜா, விஹாரி பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு முன்பாக இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வீரர்கள் ஏற்கனவே விளையாடாமல் உள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளருமான ஜஸ்பிரிட் பும்ராவும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததால் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விலகி வருகின்றனர். இதன் தாக்கம் நான்காவது டெஸ்டில் இருக்கும் என்றே தெரிகிறது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை