விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ள கோப்ரா படத்தின் டீசர் வெளியானதையொட்டி, அதனைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார், சுரேஷ் ரெய்னா.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமாண்டி காலனி’, அதன்பிறகு 2018இல் நயன்தாரா நடிப்பில் வெளியான ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவருடன் ‘கோப்ரா’ படத்தில் இணைந்துள்ளார் விக்ரம். இதில், விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், விக்ரமுக்கு வில்லனாக இர்பான் பதான் நடித்திருக்கிறார், என்பதுதான்.
இந்நிலையில், கோப்ரா படத்தின் டீசர் வெளியாகி தாருமாறி வரவேற்பை பெற்றது. இந்த டீசரில் விக்ரம் கணித வல்லுநர் மதியாக நடித்திருக்கிறார். விக்ரமா இது? என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு பல்வேறு கெட்டப்புகளில் ஆச்சர்யமூட்டுகிறார். ’இமைக்கா நொடிகள்’ போலவே ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதை என்பதை டீசர் உணர்த்துவது போல் உள்ளது.
ஸ்டைலிஷ் வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அசத்துகிறார். டீசரில் விக்ரமுக்கு இணையாக ஒரு காட்சி விக்ரம் என்றால், அடுத்தக்காட்சியில் இர்பான் பதானை காட்டி இருவருக்கும் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் இரபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை பகிர்ந்து ’உங்களை திரைப்படத்தில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றிபெற வாழ்த்துகள்’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?