திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதானமான அணையான மணிமுத்தாறு அணை 4 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகள் அமைந்துள்ளது. இந்த அணைகள் வடகிழக்குப் பருவ மழையில் நிரம்புவது வழக்கம்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனினும் மணிமுத்தாறு அணைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 111.70 அடி வரை உயர்ந்தது.
அதன்பிறகு 80 அடி கால்வாயில் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மணிமுத்தாறு அணை பகுதியில் மிதமான மழை பெய்து வருவதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி தற்போது 117.50 அடியாக உள்ளது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 763 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தலைவாய்க்கால், பெருங்கால்மதகு மற்றும் 7மதகில் ஒரு மதகு வழியாக மொத்தம் 683 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது போன்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை தற்போது 142.15 அடியாக நீர்மட்டம் உள்ளது, அணைக்கு வினாடிக்கு 2061.97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது 1942.29 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம் பகுதியில் 23 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 12 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு அணைப் பகுதியில் 6.6 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பின்பு மணிமுத்தாறு அணை நிரம்பியது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு