அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே, இதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக்கூறியிருக்கிறார்
அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. (1/2)
அஞ்சல் துறையில் கணக்கர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த தேர்வுகள் குறித்து வெளியான மொழிகள் பட்டியல் அறிவிப்பில், ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்ததால், தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன்பின்னர் வரும் ஆண்டு முதல் அஞ்சல் தேர்வுகளில் தமிழும் இடம்பெறும் என மத்திய அரசு உறுதியளித்தது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!