[X] Close >

தாலி கட்டும் நேரத்தில் காதலியுடன் மணமகன் எஸ்கேப் : மணமகளின் முடிவால் கொட்டிய கெட்டிமேளம்!

Karnataka-groom-runs-away-from-wedding--bride-ties-knot-with-a-guest

முகூர்த்த நேரத்தில் மணமகன் காதலியுடன் சென்றுவிட்டதால், திருமணத்திற்கு வந்த உறவினர் இளைஞர் ஒருவர் மணமகளை திருமணம் செய்துள்ளார்.


Advertisement

கர்நாடகாவில் திரைப்படம் காட்சி போல பரபரப்பான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. அடுத்தடுத்து ட்விஸ்ட்கள் கொண்ட அந்த திருமணம் கர்நாடக மாநிலம், சிக்கமங்களூரு பகுதியில் நடந்துள்ளது. சகோதரர்களான அசோக் மற்றும் நவீனுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்த பெற்றோர் இருவருக்கும் ஏற்ற பெண்களை பார்த்து திருமண தேதியை குறித்துள்ளனர்.

image


Advertisement

இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய முடிவெடுத்து திருமண வேலைகளும் படுஜோராக நடந்தன. திருமண முகூர்த்தம் நெருங்கிவிட்ட நேரத்தில் உறவினர்கள் சூழ அசோக்கும் அவரது வருங்கால மனைவியும் மேடையில் இருந்தனர். அதேபோல நவீனின் வருங்கால மனைவியான சிந்துவும் திருமணத்திற்கு தயாராக இருந்தார். ஆனால் மணமகன் நவீன் அந்த இடத்தில் இல்லை. ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து வந்த நவீன் முகூர்த்த நேரத்தில் காதலியுடன் சென்றுவிட்டார்.

தன்னை மீறி திருமணம் செய்தால் விஷம் அருந்திவிட்டு திருமணத்தில் ரகளை செய்வேன் என நவீனில் காதலி மிரட்டியதால் நவீன் இந்த அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மணமகனை காணாததால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மணமகள் சிந்து, அவரது குடும்பத்தினர் செய்வதறியாது இருந்துள்ளனர். உடனடியாக திருமணத்திற்கு வந்த சந்திரப்பா என்ற இளைஞரிடம் சிந்துவை திருமணம் செய்துகொள்ள தயாரா எனக் கேட்டுள்ளனர். உடனடியாக அவரும் தலையசைக்க சந்திரப்பாவுக்கும்-சிந்துவுக்கும் இடையே திருமணம் அரங்கேறியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close