இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியோடு கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பிவிட்ட காரணத்தினால், இந்திய அணியை இரண்டாவது போட்டியிலிருந்து வழிநடத்தி வருகிறார் ரஹானே. முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 - 1 என இந்த தொடர் சமநிலையில் உள்ளது.
சிட்னியில் வியாழன் அன்று (ஜன.7) மூன்றாவது போட்டி ஆரம்பமாக உள்ளது. இது கேப்டனாக ரஹானேவுக்கு நான்காவது போட்டியாகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா (2017), ஆப்கானிஸ்தான் (2018) மற்றும் ஆஸ்திரேலியா (2020) என மூன்று முறை டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்தி வெற்றி பெற செய்துள்ளார். 100 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்துள்ள ஒரே இந்திய டெஸ்ட் கேப்டன் ரஹானே தான்.
சிட்னியில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் ரஹானே இந்திய அணியை வெற்றி பெற செய்தால் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்யலாம். இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய முதல் நான்கு போட்டிகளிலும் தோனி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரஹானே சிட்னி டெஸ்டில் வெற்றியை பதிவு செய்தால் தோனிக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான இந்திய கேப்டனாக போற்றப்படுவார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும் விதமாக ரோகித் ஷர்மா வந்துள்ளார். அதே போல ஆஸ்திரேலிய அணியிலும் சிட்னி மண்ணின் மைந்தன் வார்னர் விளையாட உள்ளார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ