பொருளாதார வலிமையில் அமெரிக்காவை மிஞ்சுகிறதா சீனா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வலிமையில் முன்னிலையில் உள்ளது சீனாதான் என்று கூறுகின்றன. ஆனால் இந்தியா மட்டும் அமெரிக்காதான் என்று கூறிக்கொண்டிருக்கிறது.


Advertisement

உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 10-ல் 7 ஐரோப்பிய நாடுகள் சீனாவே பொருளாதார வலிமை படைத்தது என்று கூறியுள்ளன. ஆனால் இந்தியா அமெரிக்காவே வலிமை படைத்தது என்று கூறிவருகிறது. கருத்துக்கணிப்பில் 41 சதவீத இந்தியர்கள் சீனாவுக்கு எதிராகவும், 26 சதவீத இந்தியர்கள் சீனாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகள், ஜப்பான், ஆசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்காவை நம்பியுள்ளது. ஆனால் ரஷ்யாவும் சீனாவே வலிமையான நாடு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேயா மக்களில் இரண்டில் ஒரு சதவீதத்தினர் சீனாவே பொருளாதார வலிமை முன்னிலையில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

38 நாடுகளைச் சேர்ந்த 47 சதவீதத்தினர் சீனாவிற்கு ஆதரவாகவும், 37 சதவீதத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. ட்ரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்பாக 49 சதவீதத்தினர் அமெரிக்காவின் பக்கமும், 39 சதவீதத்தினர் எதிராகவும் கருத்துக் கணிப்பில் கூறியிருந்தனர்.

மேலும் உலக அளவில் சீனப் பிரதமர் ஜின்பிங் மீது நம்பிக்கையில்லை என்று 53 சதவீதத்தினரும், 74 சதவீதத்தினர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது குறைந்த அளவு அல்லது நம்பிக்கை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். சீன பிரதம் ஜின்பிங், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளவிற்கு பிரபலமானவர் அல்ல என்பதையும் நாம் இதில் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் உலக நாடுகளில் பெரும்பாலான நாட்டு மக்கள் சீனாவே பொருளாதார வலிமையில் முன்னிலையில் உள்ளதாக கருதுவதாக அந்த கருத்துக்கணிப்பிலிருந்து தெரிய வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement