தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ''அதிமுகவில் சாதாரண தொண்டராக இருப்பது கூட பெருமைதான். எளிய மக்களின் வாழ்க்கத்தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதால் மத்திய அரசை ஆதரிக்கிறோம். தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம். மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளோம். மத்தியில் உள்ள ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை , ஆனால் எய்ம்ஸ் வந்து சேர்ந்திருக்கிறது'' என்றார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்