ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் மனிதர்களுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை என கூறப்படுகிறது.
ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் மற்றவகை மீன்களையும், பிற நீர்வாழ் உயிரினங்களையும் இரையாக உண்பவை. இந்த மீன் வருகையால் நம் நாட்டில் பல வகையான மீன்கள் அழிந்து வருகின்றன என எச்சரிக்கப்படுகிறது.
இந்த மீன்கள் அசுத்தமான கழிவுநீர், ரசாயன கழிவுநீர், குளம், குட்டை உள்பட்ட எந்தவித தண்ணீரிலும் வாழும் தன்மை கொண்டது. நிலத்திலும் கூட இரண்டு நாட்கள் இவ்வகை மீன்கள் உயிர் வாழும். 4 லட்சத்துக்கும் அதிகமான முட்டைகள் இடும் ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் நாளடைவில் தான் வாழும் நீர்நிலையில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும்.
இவ்வகை மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்டவை அபாயகரமான அளவில் இருப்பதால் இதனை உணவாக உட்கொள்வோருக்கு தோல் வியாதிகள், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கவும், விற்கவும் மத்திய மாநில அரசுகள் தடை செய்துள்ளன. தடையை மீறி இந்த மீன்களை வளர்ப்போருக்கு 6 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?