நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து, தேனியில் நடிகர் விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, விஜய் குறித்து தனது கருத்தை அவர் சொல்லியிருந்தார்.
‘நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் என அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்லியிருக்கிறாரே?’ என சீமானிடம் செய்தியாளர்கள் கேட்க ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் வரக் கூடாது’ என சீமான் சொல்லியிருந்தார்.
சீமானின் விஜய் தொடர்பான கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தேனி நகரின் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
'முன்பு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு அவரைப் பற்றி அவதூறாக பதில் அளித்துள்ள சீமானுக்கு நடிகர் விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை' என்று கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'அரசியலின் நடிகர் சீமான்' என்றும் ஒருமையில் விமர்சிக்கப்பட்டுள்ள விஜய் ரசிகர்களின் இந்த சுவரொட்டியை தேனி நகரில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!