[X] Close >

கைக்கடிகாரத்தில் கவனம் செலுத்தும் ரியல்மீ: வருகிறது புதிய மாடல் ஸ்மார்ட் வாட்ச்!

REALME-S-PRO-AND-S-SMART-WATCHES-WILL-LAUNCH-IN-INDIA-VERY-SOON-SAYS-CEO-MADHAV-SHETH

ரியல்மீ நிறுவனம் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அதிவிரைவில் S PRO ஸ்மார்ட் வாட்சை சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத். அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் வாட்சின் டிசைரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 


Advertisement


Advertisement

இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்காக இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவ் ஷெத் பகிர்ந்திருந்த ட்வீட்டில் S PRO வாட்சின் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன. “விரைவில் அறிமுகமாக உள்ள ரியல் மீயின் சூப்பர் டிரண்டி  வாட்ச்களை பாருங்கள்” என சொல்லி அதன் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்மார்ட் வாட்சுக்காக தங்கள் நிறுவனம் பரிசீலித்த டிசைன்களையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். S PRO மாடல் ஸ்மார்ட் வாட்ச் உடன் S ஸ்மார்ட் வாட்சையும் ரியல் மீ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய AMOLED தொடு திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் மெட்டல் (உலோகத்தால்) வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close