அமைதியாக போராட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு, அரசுகள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜரிக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும்போது “மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உண்டு, அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் குறித்த வெளிநாட்டுத் தலைவர்கள் கூறிய கருத்துக்களை "தவறான தகவல்" மற்றும் "தேவையற்ற கருத்துகள்" என்றும், இது ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பானது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்ததை எதிர்க்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவின் கனட தூதரை அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு