"ரஜினி முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அதன்பிறகு அதுபற்றி பதில் கூறுகிறேன்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவகங்கை மாவட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சித் தொடங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு, "அவர் (ரஜினி) முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். அறிவிப்பை மட்டும்தானே வெளியிட்டுள்ளார். அவர் கட்சியைப் பதிவு செய்த பிறகு, அதுபற்றி பதில் தருகிறேன். அவர் தன்னுடையைக் கருத்தைதான் சொல்லியிருக்கிறார். கற்பனையான விஷயம் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது" என்றார்.
முன்னதாக, அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமையும் என தெரிவித்திருந்தார்.
ஆனால், ஓபிஎஸ் பேசியது அதிமுக-வின் கருத்து அல்ல எனவும், அது அவரது சொந்த கருத்து எனவும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்