இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், சில வாரங்களில் தடுப்பூசி தயாராகும் என வல்லுநர்கள் நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், அமித் ஷா, ராஜ்நாத்சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதற்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவது, யாருக்கெல்லாம் அதை செலுத்துவது, ஒவ்வொரு மாநிலத்திலும் முன்களப்பணியாளர்களுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பது தொடர்பான அறிக்கை தயார் செய்தல், கொரோனா தடுப்பூசிகளை குளிர்சாதன பெட்டிகளில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தக்கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பேசிய பிரதமர் மோடி பேசினார். அவர் கூறும் போது “ சில வாரங்களில் தடுப்பூசி தயாராகும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி இந்தியாவில் நிச்சயமாக கிடைக்கும்” என்றார்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறும் போது “ இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது” என்று கூறினார்.
பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இந்தியாவில் கோவாக்சின், சைக்கோவ்-டி மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்