[X] Close >

“வெற்றிகள் மென்மேலும் குவிய வேண்டும்” - நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து

chief-minister-edappadi-palanisamy-wishes-to-cricketter-natarajan

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் குவிய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி சார்பில் சேலத்தைச் சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் விளையாடினார். இது அவருக்கு முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி. களம் கண்ட முதல் ஆட்டத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close