கடந்த இரண்டு நாள்களில் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் 2,64,000 இந்தியர்கள், டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு நீதி கோரி ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் ஏழாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகளை அடுத்து, இந்திய விவசாயிகள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இந்தியர்கள் உணவு விநியோகம் மற்றும் மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகின்றனர்.
அதுபோலவே தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நீதி கோரியும் ஆன்லைன் மனுக்களில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்தபோது மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தாக்கினர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்களால் Change.org ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் 2,64,000 கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விவசாயிகளுக்கு நீதி கோரும் வகையில் உள்ளன.
மூன்று விவசாய மசோதாக்களை ரத்து செய்யக் கோரும் அமெரிக்க சீக்கிய கவுன்சிலின் மனுவில் "உழவர் சட்டம் 2020 என்பது மோடி அரசால் இயற்றப்பட்ட மிகவும் மோசமான சட்டமாகும், இது சரியான செயல்முறை இல்லாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் "வயிற்றை நிரப்ப சாப்பிடும் எவரும் கட்டாயம் மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதால் இந்த போராட்டத்திற்கான காரணத்தை ஆதரிக்கவும், இந்த மனுவில் கையொப்பமிடவும் ஒவ்வொருவரும் விரும்புகிறார்" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களில், இந்த மனு கிட்டத்தட்ட 80,000 கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. இதுபோலவே மற்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்