பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 34 வீரர்கள் உள்பட மொத்தம் 54 பேர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். முதல் டி 20 போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களை சந்தித்த பெண் ஒருவர் பாபர் அசாம் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் பாபர் அசாம் தன்னுடைய பள்ளித் தோழன் என குறிப்பிட்டுள்ள அந்தப் பெண் 10 ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்வதாக எனக் கூறி ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பாபர் அசாமின் இக்கட்டான காலக் கட்டங்களில் தான் பண உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு சமயத்தில் தானும் பாபர் அசாமும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் தேசிய அணியில் இடம் கிடைத்ததும் பாபர் அசாம் பின் வாங்கிவிட்டார் என கூறியுள்ளார்.
So this lady has made accusations against Babar Azam "he promised to marry me, he got me pregnant, he beat me up, he threatened me and he used me"
Video courtesy 24NewsHD pic.twitter.com/PTkvdM4WW2 — Saj Sadiq (@Saj_PakPassion) November 28, 2020
பாபர் அசாம் தனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கூறும் அந்தப் பெண், இது குறித்து புகார் அளிக்க ஒருமுறை முயன்றபோது தன்னை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் பாபர் அசாம் இருக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இத்தகைய குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி