காஞ்சிபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2500 ஏக்கர் மதிப்புள்ள நெற்பயிர்கள் நீரில் முழுகி முற்றிலும் சேதமடைந்தது.
நிவர் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக காஞ்சிபுரத்தில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கத் தொடங்கியது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த உள்ள வேளி யூர், கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சில இடங்களில் பயிர் வைத்த இடமே தெரியாமல் முழுவதுமாக மூழ்கி அனைத்தும் வீணாகி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர்கள் நன்றாக வளர்ந்து இருந்ததாகவும் லாபம் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த திடீர் மழை பெய்ததால் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Loading More post
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
சாலையில் கிடந்த பையில் 15 பவுன் நகை...நேர்மையுடன் காவலரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!