“அதிமுகவுக்கு வேறு வழியில்லை” - பாஜக உடனான கூட்டணி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து

----no-way-for-admk--political-party-leaders-opinion-about-admk-bjp-alliance

பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதை தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லை என்று திமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

 image

சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டும் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.


Advertisement

இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் “ இப்போது நடக்கும் அதிமுக ஆட்சி முழுக்க முழுக்க ஊழல் ஆட்சி, இந்த ஆட்சியே பாஜகவின் தயவால்தான் நடக்கிறது. அதனால் அதிமுகவிற்கு வேறு வழியில்லை, இந்த கூட்டணி படுதோல்வியை தழுவும்” என தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்“ தமிழகத்தின் அனைத்து மத்திய அரசின் பணிகளிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்காமல்,வட மாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்தி தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலமாக அதிமுக தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழக உரிமைகளை அடகுவைத்து அதிமுக இந்த கூட்டணியை அமைத்துள்ளது” என கூறினார்.


Advertisement

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்திற்கான மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்த பாஜகவோடு வேறு வழியே இல்லாமல் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது போல, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வியடைவார்கள்” என தெரிவித்தார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.பி ரவிக்குமார் தனது முகநூல் பதிவில் “அதிமுக - பாஜக கூட்டணி மூலமாக கிடைக்கும் நன்மை எதுவென்றால் மதச்சார்பற்ற வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்கு வரும். தீமை எதுவென்றால் தேர்தலுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் பாஜக தொண்டர்கள் ஆவதை சுமுகமாக்கும்” என தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement