டெல்லி: 3 மாதத்தில் 76 குழந்தைகளை மீட்ட  பெண் காவலருக்கு பதவி உயர்வு

delhi-Cop-who-rescued-76-kids-gets-out-of-turn-promotion

மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை மீட்டுள்ளார் டெல்லி பெண் காவலர் சீமா தாகா. இதில் 56 பேர் 7-12 வயதுடையவர்கள். டெல்லி காவல்துறையின் சிறப்பு ஊக்கத் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குள் பதவி உயர்வு பெற்ற முதல் நபர் இவர் ஆவார்.


Advertisement

 image

டெல்லி மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 76-க்கும் மேற்பட்ட குழந்தைகளை 3 மாதத்தில் கண்டுபிடித்ததற்காக ‘அவுட்-ஆஃப்-டர்ன்’ பதவி உயர்வு பெற்ற முதல் போலீஸ் பணியாளர் என்ற பெருமையை சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் தலைமை கான்ஸ்டபிள் சீமா தாகா பெற்றுள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா இவருக்கு நேற்று இந்த பதவி உயர்வை வழங்கினார்.


Advertisement

முன்னதாக கமிஷனர் ஸ்ரீவாஸ்தவா ஒரு ஊக்கத் திட்டத்தை அறிவித்திருந்தார் , அதன்படி கான்ஸ்டபிள்கள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள்கள் ஒரு வருடத்திற்குள் 50 குழந்தைகளுக்கு மேல் மீட்கும்பட்சத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று டெல்லி வடக்கு மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சீமா தாகா, மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 76 குழந்தைகளில் 56 பேர் 7-12 வயதுடையவர்கள். எனவே ஊக்கத் திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்குள் பதவி உயர்வு பெற்ற முதல் நபர் சீமா தாகா ஆவார்.

image

டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளை மீட்டுள்ளதாக தாகா தெரிவித்துள்ளார். “எனது உயர்அதிகாரிகளும் குழு உறுப்பினர்களும் இந்த பதவி உயர்வு பெற எனக்கு உதவினார்கள். நான் ஒரு தாயாக இருப்பதால், எந்த தாயும் தங்கள் குழந்தையை இழப்பதை விரும்பவில்லை. குழந்தைகளை மீட்பதற்காக ஒவ்வொரு நாளும் கடிகாரத்தைப்போல சுற்றிசுற்றி வேலை செய்தோம், ”என்று தாகா கூறினார்.


Advertisement

பதின் வயதினர் பெற்றோருடன் சிறிய சண்டைகளுக்குப் பிறகு வீடுகளை விட்டு வெளியேறி பின்னர் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றில் சிக்கிய பல குழந்தைகளையும்தான் கண்டதாக சீமா தாகா கூறினார். "நாங்கள் குழந்தைகளை மீட்கும்போது, நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம். இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் காணப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுடன் பேசுகிறோம், அவர்களது பெற்றோரைப் பற்றி அவர்களிடம் கேட்கிறோம், ”என்று அவர் கூறினார். ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாகா, மூன்று வார வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement