தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வழக்கமான அரசுப் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளையும் தமிழக அரசு இயக்கியது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 9 ஆயிரத்து 510 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 247 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் சென்றன. இந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறப்புப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகும். சென்ற ஆண்டில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் 6 லட்சத்து 70ஆயிரம் பேர் பயணித்திருந்தனர்.
Loading More post
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி