[X] Close >

சென்னையில் பல இடங்களில் பலத்த மழை!

Heavy-rain-in-many-places-in-Chennai-
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்வதால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.
 
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close