நடிகர் பிருத்விராஜின் 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டதாக அவர் கொடுத்த புகாரின்பேரில் தற்போது அந்த கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகளை வைத்து அதில் அவர்களுடைய புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டிருப்பார்கள். சமீபத்தில் இதுபோன்ற போலி கணக்குகளிலிருந்து தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவங்களை பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.
சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜின் மகள் அலாக்ரிதா பெயரில், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அந்தக் கணக்கு போலியானது என பிருந்த்விராஜும் அவருடைய மனைவி சுப்ரியா மேனனும் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அதில், தங்களின் 6 வயது மகளுக்கு இப்போது சமூக ஊடகங்களில் கணக்குகள் தேவையில்லை என்றும், அவள் பெரியவளாகும்போது தனக்கு வேண்டிய சமூக ஊடங்களைப் பயன்படுத்துவது பற்றி அவளே முடிவு செய்துகொள்வாள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களால் செல்லமான ஆல்லி என்று அழைக்கப்படும் பெயரில் தொடங்கப்பட்ட அந்த கணக்கை 934 பேர் ஃபாலோ செய்துவந்துள்ளனர். மேலும் அந்த கணக்கை பிருத்விராஜ் மற்றும் சுப்ரியா பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இந்த தம்பதியர் கொடுத்த புகாரின்பேரில், அந்த கணக்கு நீக்கப்பட்டுள்ளது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’