பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காலம் என்பதால் வாக்குகளை எண்ணுவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 175 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 57 இடங்களிலும் பாஜக 49 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் 30 இடங்களிலும் காங்கிரஸ் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக கூட்டணி 123 இடங்களிலும், ராஷ்டிர ஜனதா தளத்தின் மெகா கூட்டணி 113 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் அறிவிக்க நள்ளிரவுக்கு மேல் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. தற்போது வரை பாஜக கூட்டணி 122 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒரு வேளை ஒரிரு இடங்களில் பின்னடைவை சந்தித்தாலும் பிற கட்சிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அதேபோல் தேஜஸ்வி கூறுவது போல் 119 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால் அந்த கூட்டணி ஆட்சி அமைக்க மேலும் 3 இடங்கள் தேவைப்படும்.
இந்தத் தேர்தலில் அசாதுதின் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி இதுவரை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ஆக மொத்தம் 5 இடங்களில் அது பிடித்துள்ளது. ஒருவேளை ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் பட்சத்தில் ஓவைசி கட்சி கிங் மேக்கராக செயல்பட வாய்ப்புள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு விபரங்கள் பின்வருமாறு:
ஆர்.ஜே.டி கூட்டணி (122)
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 60
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
சிபிஎல் ( எம்.எல்) - 9
காங்கிரஸ் கட்சி - 13
--------
ஜே.டி.யூ கூட்டணி (113)
பாரதிய ஜனதா கட்சி - 49
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி -3
ஐக்கிய ஜனதா தளம் - 30
விகாஷீல் இன்சான் கட்சி - 4
----------
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் - 4
எல்.ஜே.பி - 1
மற்றவை -7
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?