அடுத்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் – கங்குலி

Sourav-Ganguly-hopeful-of-hosting-next-IPL-in-India

''அடுத்த ஐபிஎல் தொடரின்போது கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும், அதனால் இந்தியாவிலேயே நடத்த முடியும்'' – கங்குலி  


Advertisement

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரின் அடுத்த பதிப்பு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மறு சீரமைப்பை செய்ய விரும்பும் சூழ்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் முழு அளவிலான ஏலம் நடைபெறுமா என்பது குறித்து கேட்டதற்கு, “நாங்கள் இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை. இந்த சீசன் முடிவடையட்டும்.  ஏலம் குறித்து பிசிசிஐ ஆலோசித்து அழைப்பு விடுக்கும்” என்றார் கங்குலி.


Advertisement

'அடுத்த ஐபிஎல் தொடரின் போது நிச்சயமாக கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும், அதனால் இந்தியாவிலேயே ஐபிஎல் தொடரை நடத்த முடியும்' என்றும் கங்குலி தெரிவித்தார். 

image

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு தோனி பேசும்போது, "அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் வைத்து நாங்கள் எங்கள் அணியை சற்று மாற்றியமைக்க வேண்டும். அனைத்தும் பிசிசிஐயின் முடிவை பொறுத்தே உள்ளது. இது ஒரு கடினமான ஆண்டு. பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசன்களில் இதுவும் ஒன்றாகும்” என்று கூறியிருந்தார்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement