மஞ்சள் தான் வாழ்க்கை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கேவின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இன்று தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. பஞ்சாப் அணியை வீழ்த்திய நிலையில், மொத்த விளையாடிய 14 போட்டிகளில் 6இல் வென்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றாலும் கடைசி மூன்று போட்டிகளில் வென்றது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ஆதர்சன வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அவர் விலகிவிட்டார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னா மஞ்சள் தான் வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், நிச்சயம் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் என்றே தோன்றுகிறது. தோனியிடம் இன்று இதுதான் கடைசி போட்டியா எனக் கேட்கப்பட்டது போது நிச்சயமாக இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இருவரும் ஒரே மாதிரியான பதிலை கூறியுள்ளார்கள்.
முன்னதாக தோனி போட்டிக்கு பின்ன தெரிவித்த கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று தோனி கூறியுள்ளார். அத்துடன் புதிய தலைமுறைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சீனியர் வீரர்களுக்கு அடுத்த ஐபிஎல் சீசனில் வாய்ப்பு இருக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!