ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்: மும்பை Vs டெல்லி; பெங்களூர் Vs ஹைதராபாத்.!

Mumbai-Vs-Delhi-and-RCB-Vs-SRH-in-today-IPL-clash

நாளுக்கு நாள் பரபரப்பை எகிற வைத்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு பலப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.


Advertisement

துபாயில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயாஸ் ஐய்யர் தலைமையிலான டெல்லி அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கெய்ரன் பொல்லார்டு தலைமையிலான மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் டெல்லி அணி 12 போட்டிகளிலும், மும்பை அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌

ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

image


Advertisement

அவற்றில் பெங்களூரு அணி ‌ 7 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. ‌

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement