‘ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு’ என்பது ஒளவையார் பாடிய மூதுரை பாடல். ஆனால், கொக்குபோல் காக்கையும் காத்திருக்கும் என்பதைக் காண்பித்திருக்கிறது ஒரு வைரல் வீடியோ. அதாவது, மீன்கடைக்காரர் கொடுக்கும் சின்ன சின்ன மீன்களை வாங்கி கீழே வைத்துவிட்டு பெரிய மீன் கொடுத்ததும் மீனோடு எஸ்கேப் ஆகும் காக்கையின் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், கா… கா என்று கரைந்துகொண்டிருக்கும் காக்கையிடம் சின்ன சின்ன மீன்களை கொடுக்கிறார் கடைக்காரர். ஒவ்வொரு, சின்ன மீனையும் தனது அலகால் கவ்வி கீழே போட்டுவிட்டு காத்திருக்கிறது காகம். ஒரு கட்டத்தில் கடைக்காரர் பெரிய மீனைக் கொடுத்ததும்… வாயாலேயே எடைபோட்டு கவ்வியபடி நைஸாக மீனோடு எஸ்கேப் ஆகும் காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
Intelligence without ambition,
Is like a bird without wings...
This crow had the ambition on a bigger stuff. Real fascinating is the wild? pic.twitter.com/e6zBKrc7yr — Susanta Nanda IFS (@susantananda3) October 29, 2020
‘புத்திசாலித்தனம் இல்லாத லட்சியம் இறகுகள் இல்லாத பறவைப் போன்றது. இந்த காகத்திற்கு லட்சியம் இருக்கிறது’ என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!