மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் 12 ஆட்டங்கள் விளையாடி 362 ரன்களை குவித்துள்ளார் சூரியகுமார் யாதவ். அதோடு டொமெஸ்டிக் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார் அவர்.
எப்படியும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் என எல்லோரும் இதனை சொல்லி வந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
இதனையறிந்து கொதிப்படைந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் பிசிசிஐ தேர்வு குழுவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் 43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். அவரது ஆட்டம் ‘என்னை டீமில் சேர்க்காமல் தப்பு செய்து விட்டீர்களே’ என சொல்வதுபோல இருந்தது.
இந்த ஆட்டத்தின்போது பெங்களூரு கேப்டன் கோலி கோபத்தில் சூரிய குமார் யாதவிடம் கொப்பளித்தும் இருந்தார்.
சூரிய குமாரின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ‘சூரிய நமஸ்கார்… வலுவோடு இருங்கள், பொறுத்திருங்கள்’ என சூரியகுமாரின் படத்தோடு டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் இப்போதைக்கு இல்லை என்றாலும் கூடிய விரைவில் சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதை உணர்த்துவதுபோல இருந்தது.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி