ஆன்லைன் வீடியோ மோகம் - 3 வயது சிறுவன் கழுத்தை நெறித்துக் கொன்ற இளைஞன்

17yr-old-kills-3yr-old-in-Hyderabad-after-child-gets-hurt-while-shooting-video

பெங்களூர் அருகே பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவர் ஒருவர், 3 வயது சிறுவர் ஒருவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அங்குள்ள ஒரு விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்து வந்த இவரின் செயல்பாடுகளை, 3 வயது சிறுவன் அதியன் செல்போனில் படம் பிடித்துக்கொடுத்துள்ளார்.

image


Advertisement

அந்த வகையில் வழக்கம் போல் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதியும் அதியனின் உதவியோடு 17 வயது சிறுவன் வீடியோ எடுத்துள்ளார். ஆனால் அன்றைய பொழுது வழக்கமானதாக இருக்க வில்லை. ஆம், சம்பந்தப்பட்ட சிறுவனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அதியன் தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அழுதுள்ளார்.

இதனைப்பார்த்த 17 வயது சிறுவன், அந்த சிறுவனின் பெற்றோர் தன்னிடம் காயத்திற்கான காரணத்தை கேட்பாளோர்களா என அஞ்சி அவரை கழுத்தை நெறித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. விளையாட போன சிறுவன் வீடு திரும்பாத நிலையில், கவலையுற்ற அதியனின் தந்தையான சையத் யூசுப் காவல் நிலையத்தில் மாலை 7.30 மணிக்கு புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுவன் காணவில்லை என்பது தொடர்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. இப்படி காவலர்கள் ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருக்க, அக்டோபர் 23 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு எண்ணிலிருந்து அதியனின் பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை ஒப்படைக்க வேண்டுமானால் 15 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.


Advertisement

இந்த தகவலானது போலீஸாரிடம் கடத்தப்பட்டது. அந்த எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபரை சேஸிங் செய்த காவல்துறையினர் பேசிய நபர் பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர் 3 வயது சிறுவனை கழுத்தை நெறித்துக்கொன்று, அவனது சடலத்தை ஒரு பையில் ஆட்டோ ரிக்‌ஷா மூலம் நகரத்திற்கு வெளியே வீசியது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்ட காவல்துறையினர், அக்டோபர் 15 ஆம் தேதி சிறுவனை பையில் வைத்து கைது செய்யபட்ட நபர் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர். மேலும் பணத்தை கேட்டு மிரட்டியதற்கான காரணத்தைக் கேட்ட போது பீகாருக்கு தப்பித்துச் செல்வதற்கு கேட்டதாக கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement