மீண்டும் தொடங்க இருக்கும் வந்தே பாரத் விமான சேவை - ஊர் திரும்பும் இந்தியர்கள் !

Vande-Bharath-to-bring-back-Indians-from-October-29th

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 7 ஆம் கட்ட சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியின் 7-ம் கட்டம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்குவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரித்துள்ளார்.

Vande Bharat Mission, Phase 3: Air India to offer more seats after surge in  demand for tickets | coronavirus outbreak News,The Indian Express


Advertisement

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறும்போது “வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் ஏழாவது கட்டம் அக்டோபர் 29ஆம்தேதி தொடங்க உள்ளது" என்றார்.

மேலும் " அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி - மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16ஆம் தேதி திருச்சி-பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது" என்றார் ஹர்தீப் சிங் பூரி.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement