மும்பையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்துக் காவலரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
29 வயதான சங்ரிகா திவாரி என்ற பெண்மணி, தனது சக பயணியான மொஹ்சின் ஷேக் (32) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நேற்று மும்பை கல்பாதேவி பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் ஏக்நாத் பார்தே மற்றும் அவருடன் நின்று கொண்டிருந்த சக காவலர் ஆகிய இருவரும் அவர்கள் சென்ற வாகனத்தை நிறுத்தி, தலைகவசம் அணியாதத்திற்கான காரணத்தைக் கேட்டதாக இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
Watch: Viral video of a lady, reportedly a pillion rider, assaulting an on-duty traffic cop in Mumbai. The lady and the person who drove the bike have been arrested. The lady alleges that the traffic cop had verbally abused her.
Aruneel with details. pic.twitter.com/OGDQXQjDZT — TIMES NOW (@TimesNow) October 24, 2020
இதில் சங்ரிகா திவாரிக்கும் காவலருக்கும் வாக்குவாதம் மூண்டது. இந்த வாக்குவாதத்தில் காவலர் பார்தே சங்ரிகா திவாரியிடம் தவறாக நடந்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சங்ரிகா திடீரென காவலரை தாக்கத் தொடங்கினார்.
காவலரின் சட்டையைப் பிடித்து இழுத்து சங்ரிகா சரமாரியாகத் தாக்கிய முழு சம்பவத்தையும் மொஹ்சின் ஷேக் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சக காவலர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்ட வர முயன்றார்.
ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் காவலர், சங்ரிகா மற்றும் மொஹ்சின் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Loading More post
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?