உலக ஒலிப்பதிவு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக ஒலிப்பதிவு விருதுக்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான், ‘வைஸ்ராய் ஹவுஸ்’ என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தை இங்கிலாந்தில் வசிக்கும் சீக்கியரான குரிந்தர் சத்தா இயக்கியுள்ளார். ஹுமா குரேஷி, ஹக் போனிவில்லே, மறைந்த நடிகர் ஓம்புரி உட்பட பலர் நடித்துள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகி இருந்த இந்தப் படம், ‘பார்ட்டிசன்-1947’ என்ற பெயரில் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் இறுதி நாட்களில், வைஸ்ராய் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். 

இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பாக ஒலிப்பதிவு செய்ததற்காக, உலக ஒலிப்பதிவு விருதுக்கு அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவர் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement