ஹைதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த சோகத்தை தாங்கிக்கொள்ளமுடியாத மனைவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹைதராபாத்தின் சைனக்புரியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவனுடன் வசித்து வந்திருக்கிறார் 55 வயது பெண்மணி. அந்தப் பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைசெய்துவந்த அந்த பெண்ணையும் வீட்டில் தனிமைபடுத்தி இருந்திருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை அந்த பெண் கவனித்து வந்திருக்கிறார். ஆனால் நிலைமை மோசமாகவே வியாழக்கிழமை அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
குழந்தைகளும் இல்லாத தனக்கு ஆதரவாக இருந்த கணவனின் இழப்பைத் தாங்கிக்கொள்ளமுடியாத அந்தப் பெண் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். பலத்த அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!