[X] Close

என்னுடைய பெயரே ’கொரோனா’ தான்.. பெயரால் பாடாய்படும் தொழிலாளி..!

Subscribe
This-man-carries-his-proof-of-identification-everywhere-because-his-surname-is-Korona
இங்கிலாந்தின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் பெயர்தான் ஜிம்மி கொரோனா. தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா பெயர் ஒட்டிக் கொண்டுள்ளதால் படாதபாடுபட்டு வருவதாக ஜிம்மி கொரோனா வேதனையுடன் கூறினார்.
 
38 வயதான அவர் தனது பெயரைச் சொல்லும்போதெல்லாம் ‘காமெடி பண்ணுகிறார்’ என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். கொரோனா என்கிற வைரஸ் பெயர் பிரபலமாக தொடங்கியதிலிருந்து ஜிம்மி கொரோனாவின் பெயர் மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவையாகவும் உரையாடலாகவும் மாறிவிட்டது என்கிறார் அவர்.
 
யாராவது பெயர் என்ன கேட்டால் ஜிம்மி கொரோனா என்றதும் அவர்களை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையிலேயே தனது பெயர் இதுதான் என்பதை நிரூபிக்க எல்லா இடங்களிலும் தன்னுடைய அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்கிறார்.
 
ஜிம்மி கொரோனாவுக்கு சமீபத்தில் மகன் பிறந்துள்ளார். அப்போது பெயர் எழுதும் இடத்தில் தனது பெயரை ஜிம்மி கொரோனா என்று எழுதியபோது மருத்துவமனையே அதிர்ச்சி அடைந்தது. இதனால் தனது அடையாள அட்டையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்கிறார் ஜிம்மி கொரோனா.
 
இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவரை, இவரது அண்டை வீட்டார்களும், சக தொழிலாளர்களும் ‘கொரோனா’ என்றே அழைக்கிறார்கள். சிலர் வைரஸ் என்று கிண்டல் செய்கிறார்கள். பலர் பெயர் என்னவென்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். ஆனாலும் அதை புன்முறுவலுடன் ஜிம்மி கொரோனா கேட்டுக்கொள்கிறார்.
 
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் ஒரு வதை முகாமில் தப்பிய ஜோசப் கொரோனா என்பவரின் பேரன் தான் ஜிம்மி கொரோனா என்று தனது பெயர்க்காரணத்தை விளக்கினார் அவர். 38 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் ஆசையில் வைத்த பெயர் இப்போது பாடாய் படுத்துகிறதே என்று நொந்து கொள்கிறார் ஜிம்மி கொரோனா.
 
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close