திருட்டு சந்தேகத்தில் பெண் அடித்துக் கொலை.. பதைபதைக்கும் சம்பவம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
மேற்கு வங்கத்தில் திருட்டு சந்தேகத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திருட்டு சந்தேகத்தின் பேரில் சூஃபியா பீபி என்ற 41 வயதான ஒரு பெண்ணை 14 பேர் சேர்ந்து கம்பு, கம்பிகளால் தாக்கியுள்ளனர். இதைத்தடுக்க வந்த அந்த பெண்ணின் கணவர் அலி ஹொசைன் மொல்லாவையும் தாக்கியுள்ளனர்.
 
இதில் சூஃபியா பீபியை மயக்கமடையும் வரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்நிலையில் இறந்த பெண்ணின் கணவர் அலி ஹொசைன் மொல்லா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கொலை வழக்குப் பதிவு செய்து தாக்கியவர்களை தேடி வருகின்றனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement