அனிருத் பிறந்தநாளையொட்டி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ’குயிட் பண்ணுடா’ லிரிக் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு.
பிகில் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தனது 64 வது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார். படமும் முடிவடைந்துவிட்டது. கொரோனா தொற்றால் பரவல் அதிகரித்துள்ளதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை அமைத்திருப்பவர் அனிருத்.
Happy birthday rockstar @anirudhofficial ! Have a blast! Thank you @VigneshShivN bro for the awesome lyrics!https://t.co/dg2yERFazq#QuitPannuda #HappyBirthdayRockstarAnirudh — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 16, 2020
இந்நிலையில், இன்று அனிருத்தின் 29 வது பிறந்தநாளையொட்டி ஸ்வீட் சர்ப்ரைஸாக மாஸ்டர் படத்தில் அனிருத் பாடியிருக்கும் குயிட் பண்ணுடா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இப்பாடலை எழுதியிருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.
What a bday gift from dearest team #Master :) #QuitPannuda pic.twitter.com/ED37yK1MZZ — Anirudh Ravichander (@anirudhofficial) October 15, 2020
பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவர்கள் பாடலை வெளியிட்டு அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!