பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.


Advertisement

நவராத்திரி பண்டிகையையொட்டி, சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை - மதுரை இடையே, வரும் 19 ஆம் தேதி முதல், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை - கோவை இடையே செவ்வாய் தவிர வாரத்தின் 6 நாள்கள் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

image


Advertisement

சென்னை - டெல்லி இடையே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தூரந்தோ ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சந்திரகாசிக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, திருவனந்தபுரத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஷாலிமருக்கும், கன்னியாகுமரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹௌராவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

loading...

Advertisement

Advertisement

Advertisement