கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் நிங்கப்பா. 35 வயதான அவருக்கு அரசியலில் பெரிய ஆளாக உருவாக வேண்டுமென்ற பேர் ஆர்வம்.
அதனால் ஊருக்குள் பசுந்தோல் போர்த்திய புலியாக வலம் வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான நிங்கப்பாவிற்கு சசிகலா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் அது காதலாக மலர அவரை இரண்டாவதாக மனம் முடித்துள்ளார் நிங்கப்பா.
இருப்பினும் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார் அவர். நிங்கப்பா மற்றும் சசிகலாவுக்கு இரண்டு வயதில் சிரிஷா என்ற பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.
இந்நிலையில் தங்களது திருமணத்தை ஊர் அறிய சொல்லும்படி நிங்கப்பாவை வற்புறுத்தி வந்துள்ளார் சசிகலா.
பஞ்சாயத்து தேர்தலுக்காக தயாராகி வந்த நிங்கப்பா குழந்தை சிரிஷாவை தன்னிடம் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும்படி சசிகலாவிடம் சொல்லியுள்ளார். அவரும் அதன்படியே செய்துள்ளார்.
அதனையடுத்து தனது அரசியல் வாழ்விற்கு சிரிஷா முட்டிக்காட்டையாக இருப்பார் அஞ்சி குழந்தை சிரிஷாவை கொடூரமாக அடித்து, குழி தோண்டி புதைத்து கொன்றுள்ளார் நிங்கப்பா.
தனது சொந்த மகளையே நிங்கப்பா கொலை செய்தது போலீசாரிடம் மகளை காணவில்லை என சசிகலா கொடுத்து புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சுமார் ஒரு மாத காலம் கழித்து தெரியவந்துள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்