”பொறுத்தது போதும் ரசிகர்களே.. இதோ வந்துவிட்டேன்” சர்ப்ரைஸ் கொடுத்த கெயில்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரிக்கெட் உலகின் மரண அடி மாவீரரான கிறிஸ் கெய்ல் நடப்பு சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் உள்ளார். 


Advertisement

image

பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அதனை அவரே பஞ்சாப் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“அன்பான ரசிகர்களே எனது ஆட்டத்தை காணாமல் தவித்து ஏக்கத்ததோடு காத்திருந்தது போதும். யூனிவெர்ஸ் பாஸ் இப்போது காலத்திற்கு திரும்பியுள்ளேன். நீங்கள் எல்லோரும் எனது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துள்ளீர்கள் என எனக்கு தெரியும். ஒரு வேளை ஏதேனும் விஷமத்தனமாக எனக்கு நடந்தால் தான் என்னால் விளையாட முடியாமல் போகலாம். அப்படி எதுவும் நடக்காது என நினைக்கிறேன். 


Advertisement

image

எங்கள்  அணி  புள்ளிப்பட்டியலில்  பின்தங்கியுள்ளது  என  எனக்கு தெரியும். அடுத்து நாங்கள் விளையாடவுள்ள ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவோம். தன்னம்பிக்கை இருந்தால் போதும் அனைத்தும் வசமாகும்” என கெய்ல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement