”நான் பீஷ்மரும் இல்லை.. திருமணத்தை எதிர்க்கவும் இல்லை”: ’சக்திமான்’ புகழ் முகேஷ் கண்ணா

I-am-not-against-marriage--Saktimaan-fame-Mukesh-Khanna

’திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று பீஷ்மரைப் போல எந்த உறுதிமொழியையும் நான் எடுக்கவில்லை. ஆனால், திருமணங்கள் விதியில் எழுதப்பட்டவை’ என்று சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.


Advertisement

90 ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் என்றும் மறக்கவே முடியாத ஸ்வீட் மெமரீஸ்களில் ‘சக்திமான்’ தொடரும் உண்டு. தூர்தர்ஷன் சேனலில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான இத்தொடரை தயாரித்து நடித்திருந்தார் நடிகர் முகேஷ் கண்ணா. இந்தியாவில் ஒளிபரப்பான முதல் சூப்பர் ஹீரோ தொடர் என்ற பெருமை சக்திமான் சீரியலுக்கே உண்டு.

image


Advertisement

பெரும் வரவேற்பையும் ரசிகர்களையும் கொண்டிருந்த இத்தொடர் குறித்து பேச்சு எழுந்தாலே எல்லோருக்குள்ளும் உற்சாகமும் குதூகலமும் மனதில் குத்தாட்டமிடும். அந்தளவுக்கு இந்திய மக்களை ஈர்த்த ’சக்திமான்’ தொடரில் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது அவருக்கு 58 வயதாகிறது.

image

 சமீபத்தில் ’ஆன் தி டாக்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஒரு காலத்தில் எல்லோருக்கும் பிடித்த கேள்வி ‘ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ என்பதுதான். நான் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல. மகாபாரத பீஷ்மர் திருமணம் ஆகாதவர். மகாபாரதம் தொடரில் நான் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடித்ததால்தான் எல்லோரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றனர்.


Advertisement

image

நான் அவ்வளவு பெரியவன் அல்ல. எந்த மனிதனாலும் பீஷ்மராக மாறமுடியாது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் பீஷ்மரைப்போன்று எந்தவொரு உறுதிமொழியையும் எடுக்கவில்லை. ஆனால், திருமணங்கள் விதியில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement