60 நிமிடத்தில் 33 வகையான உணவுகளை சமைத்து சாதனைப் படைத்த 10 வயது சிறுமி.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார்


Advertisement

சமையல் என்பது ஒருவகை கலை. சிலர் அதனை வேலையாக செய்யாமல் ரசித்து செய்வார்கள். சிலருக்கு சமையலில் அதிக ஆர்வமும் இருக்கும். அப்படி சமையல் மீதான காதலால் சாதனை படைத்துள்ளார் கேரள சிறுமி ஒருவர். கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்துள்ளார்

image


Advertisement

எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள் ச‌ன்வி பிரஜித் இச்சாதனையை படைத்துள்ளார். இட்லி, ஊத்தப்பம், ஃப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் ரோஸ்ட், அப்பம் உள்ளிட்ட 33 வகை உணவுகளை ஒரே மணி நேரத்தில் சமைத்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த சாதனை கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே படைக்கப்பட்டாலும் அது தற்போதுதான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

10 வயதே ஆன இச்சிறுமி யூட்யூபில் சமையல் கலையையும் கற்றுக்கொடுக்கிறாள் என்பது கூடுதல் சிறப்பம்சம். சிறுமி சன்வியின் தாயாரும் சமையல் நிபுணர் ஆவார். தாயாரின் சமையல் கலையால் ஈர்க்கப்பட்ட தான் இந்த சாதனையை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சாதனையை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமாக மறு நடவு செய்யப்பட்ட 90 ஆண்டு அரசமரம்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement