காங்கிரஸில் குஷ்புவின் பதவி பறிப்பு

Khushbu-fired-as-Congress-national-spokesperson

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெரிவித்துள்ளது.


Advertisement

காங்கி‌ரஸ்‌ கட்சியின்‌ தேசி‌‌‌ய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, பா‌ரதி‌ய ஜனதா கட்சியில் இன்று இணைய உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பா‌ஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா‌ முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸிலிருந்து விலகி குஷ்பு நாளை பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் | kushboo  will join to bjp– News18 Tamil


Advertisement

இதற்காக டெல்லி செல்வதற்‌காக சென்னை விமான நிலையத்திற்கு குஷ்பு வருகை தந்தார்.‌ அப்போது‌‌,‌ காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா எ‌ன செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்‌கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த குஷ்பு‌, அங்கிருந்து புறப்‌பட்டுச்‌ சென்றார்.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்திக்க குஷ்பு நேரம் கேட்டிருந்தார். அதற்காக டெல்லியும் சென்றிருந்தார். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால் அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பினார். இதையடுத்து எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement