இந்த வீடியோவைப் பார்த்தால் ஏதோ குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலூட்ட ஒரு தாய் பரிவுடன் தயாராகிறார் என்பதுபோலத் தோன்றும். ஆனால் அவருக்கு அருகில் ஓடியாடி விளையாடுபவை குரங்குக் குட்டிகள். வண்ண வண்ண கவுன் போட்டுக்கொண்டு மழலைகளாக துள்ளிக் குதிக்கின்றன. இந்த வீடியோ வைரலாகி மக்களைக் கவர்ந்துவருகிறது.
பால் பாட்டிலை தயார் செய்வதற்குள் ஒரு குட்டி உற்சாகத்தில் குட்டிக்கரணம் போடுகிறது. அப்பாடா... பார்ப்பதற்கே அத்தனை சுவாரசியமான காட்சி. அதிலென்ன ஆச்சரியம். அந்தக் குரங்குக்குட்டி ஒரு குழந்தையைப் போலவே பால் குடிக்க தவியாய் தவிக்கிறது.
இது உங்களை நிச்சயம் மகிழ்ச்சிப்படுத்தும் என்று அந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார். எந்த நேரத்தில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. வீடியோ காட்சியில் அந்தப் பெண் பால் பவுடருடன் நீரைக் கலந்து தயார் செய்கிறார். பின்னர் மூன்று குரங்குக் குட்டிகளும் பாலை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு ஆர்வத்துடன் பால் அருந்துகின்றன.
பால் கிடைத்ததும் அவை பெரும் அமைதியுடன் காணப்படும் காட்சி ரசனையாக இருக்கிறது. அவை மனிதர்களைப் போலவே இருக்கின்றன என ஒருவர் டிவிட்டரில் கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோ 50 ஆயிரம் லைக்குகளை அள்ளியுள்ளது.
Sure to make you happy!!! pic.twitter.com/meiTeuJTeq
— Flotsam&Jetsam Diaries (@GahlautManish) October 8, 2020Advertisement
கோலியின் ஆர்சிபி அணியை வீழ்த்துமா தோனியின் சிஎஸ்கே - ஆடும் லெவனில் யார்? யார்?
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!