மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

Vijayakanth-returned-home-from-hospital

இரண்டாவது முறையாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.


Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 24-ஆம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சில அறிகுறிகளை தொடர்ந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

image


Advertisement

இதைத்தொடர்ந்து 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 6ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement