மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆஸ்தான வீரர்களாக வலம் வருகின்றனர் ஆல்ரவுண்டர் சகோதரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்னால் பாண்ட்யா. பேட்டிங்கில் அதிரடி வேங்கையாகவும், பந்துவீச்சில் மிதவேக பந்துவீச்சாளர்களாகவும் ஜொலிக்கும் திறன் கொண்ட ஹர்திக் பாண்ட்யா, 2015ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்கு விளையாடி வருகிறார். இவரது மூத்த சகோதரரான குர்னால் பாண்ட்யா, 2016 ஆம் ஆண்டு முதல் மும்பை அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும், மத்திய வரிசை அதிரடி பேட்ஸ்மேனாகவும் பங்களித்து வருகிறார். வளமையான ஆட்டங்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதால் மும்பை இண்டியன்ஸ் அணியின் முக்கியமான வீரர்களாக இருவரும் பார்க்கப்படுகின்றனர்.
இந்த வரிசையில் பவுலிங் சகோதரர்களாக அசத்தி வருபவர்கள் தீபக் சாஹர் மற்றும் ராகுல் சாஹர். ஒரே வம்சாவளியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன் பிறவா சகோதரர்கள். 2017 ஆம் ஆண்டு இருவரும் ரைசிங் பூனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் விளையாடினர். அந்த அணி கலைக்கப்பட்ட பின்னர், தீபக் சாஹர் சென்னை அணிக்கும், ராகுல் சாஹர் மும்பை அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தீபக் சாஹர் சென்னை அணியின் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் ஆக ஜொலிக்கிறார். மறுபுறம் ராகுல் சாஹர் மும்பை அணியின் சுழல் சூத்திரதாரியாக அலங்கரித்து வருகிறார்.
இந்தப் பட்டியலில் வெளிநாட்டு சகோதரர்களும் உள்ளனர். நடப்பு சீசனில் கவனிக்கத்தக்க வீரராக வலம் வரும் சென்னையின் சாம் கரணும், ராஜஸ்தானின் டாம் கரணும் உடன் பிறந்த சகோதரர்கள். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் கரணின் மகன்களே இவர்கள். 20 வயதில் ஐபிஎல்லில் அறிமுகமான சாம்கரண், மிகக் குறைந்த வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
சாம்கரணைப் போலவே அவரது அண்ணன் டாம்கரணும் ஆல்ரவுண்டர் தான். 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடி வந்த டாம் கரண், நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் மத்திய வரிசை நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார்.
நடப்பு சீசனில் ஜொலித்து வரும் இவர்கள் மட்டுமின்றி பதான், மார்ஷ், ஹசி, மெக்கலம் சகோதரர்களும் ஐபிஎல்லில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!