நிகழ்கால விஷயங்களை முந்திக்கொண்டு தருபவர் ஜி.வி பிரகாஷ்: பாராட்டிய சூர்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழின் ஐந்து இயக்குநர்களான கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை’  வரும் அக்டோபர் 16 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. நான்கு அல்லது ஐந்து குறும்படங்களின் தொகுப்பே ’ஆந்தாலஜி' திரைப்படம். சில்லுக்கருப்பட்டி வெற்றிக்குபிறகு வரும் ஆந்தாலஜி படம் ’புத்தம் புது காலை’ என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


Advertisement

image

இந்த ஐந்து குறும்படங்களின் டைட்டில் பாடலை பாடி இசையமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். ’வீசும் காற்று’ என்று தொடங்கும் அந்தப் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டு “ஜி.வி பிரகாஷ் நீங்கள் நிகழ்கால விஷயங்களை எப்போதும் முந்திக்கொண்டு அர்ப்பணிப்புடன் தருகிறீர்கள். புத்தம் புதுகாலை மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தரும் வகையில் உள்ளது” என்று பாராட்டியுள்ளார்.


Advertisement

image

200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள ’புத்தம் புது காலை’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ள ஜி.வி பிரகாஷ்தான் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியாகும் முதல் ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’ என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement