புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு

chief-minister-call-For-volunteers-We-will-create-new-history

புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை நம்முன்னே காத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும்.

தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம். பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கட்சி பெருமைக்கும், புகழுக்கும், ஆசைப்படுபவனாக உழைத்து வருகிறேன். வெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. புது வரலாறு படைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement