தமிழக காவல்துறைக்கு நன்றி சொன்ன க/பெ ரணசிங்கம் படக்குழு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

க/பெ  ரணசிங்கம் படம் உள்ளூர் லோக்கல் சேனல்களில் ஒளிப்பரப்பானதை தடுத்த காவல்துறைக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனா பாதிப்பால் தியேட்டர்கள் மூடியே இருக்கும் சூழலில் கடந்த 2 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஸ்காந்த், ரங்கராஜ் பாண்டே,வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

image


Advertisement

ஜீ ப்ளக்ஸில் வெளியாகியுள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். வேலைத்தேடி வெளிநாடு செல்பவர்கள் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு கொண்டுவர ஏற்படும் சிரமங்கள், அதிலிருக்கும் அரசியல் உள்குத்துகள் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறார், இயக்குநர் விருமாண்டி.

 image

ஆனால், படம் வெளியான அன்றே இணையத்திலும் உள்ளூர் லோக்கல் சேனல்களிலும் வெளியானதால், தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.


Advertisement

அவர்களும், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததால், இன்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து “க/பெ ரணசிங்கம் படத்தை உள்ளூர் சேனல்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறைக்கும் காவல்துறையின் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கும் நன்றி. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடந்தால் காவல்துறை ஆதரவுடன் தடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement