பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா தங்கள் புதிய ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது நோக்கியா. மற்ற செல்போன்கள் நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவி உற்பத்தியில் ஈடுபடுவதால், நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட் டிவி உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தங்கள் புதிய ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளை நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இந்த டிவிகள் வரும் 15ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் ஆன்லைனில் விற்பனைக்கு வரவுள்ளன.
டிவியின் டிஸ்ப்ளே அளவிற்கு ஏற்றதுபோல அதன் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, 32 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.12,999 எனவும், 43 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.22,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு டிவியிலும் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. அத்துடன் 43 இன்ச் ஃபுல் 4கே டிவியின் விலை ரூ.28,999 ஆகவும், 50 இன்ச் 4கே டிவி 33,999க்கும் விற்கப்படவுள்ளது. இவரை இரண்டிலும் 2 ஜிபி ரேம் 16 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
மேலும், 55 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.39,999 ஆகவும், 65 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிகளில் ஜப்பான் ஆடியோ பிராண்ட்டான ஆன்க்யோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!